Regional01

வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளநீச்சல் குளம் மீண்டும் திறப்பு

செய்திப்பிரிவு

‘கரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்க அரசு நீச்சல் குளம், வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்காக திறக்கப்பட்டுள்ளது,’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் ராமன் தெரிவித்ததாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் உள்ள அரசு நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயதுக்கு மேற்பட்ட பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் நீச்சல் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது. நீச்சல் விளையாட்டு வீரர்கள் முறையான வழிகாட்டுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டு வரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டும் பயிற்சி மேற்கொள்ளலாம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. விளையாட்டுவீரர்கள் நீச்சல் குளத்தில் உள்ள உறுதிமொழிப் படிவத்தினை பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் அனுமதியுடன் பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 7401703488 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT