காவேரிப்பட்டணம் அடுத்த பென்னேஸ்வர மடம் கிராமத்தில் உள்ள பென்னேஸ்வரர் கோயிலில், திருக்கல்யாண உற்ஸவத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வேதவல்லி சமேத பென்னேஸ்வர சுவாமி. 
Regional02

பென்னேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்ஸவம்

செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் பென்னேஸ் வரர் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவ விழா நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்னேஸ்வர மடம் கிராமத்தில் அமைந்துள்ள வேதநாயகி சமேத பென்னேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவ விழா நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இவ்விழாவில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினை தருமபுரி மாவட்டம், அ.பாப்பாரப்பட்டி வேதவள்ளி சமேத பென்னேஸ்வர சுவாமி சேவா சமிதியினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT