சேலம் கோரிமேட்டில் உள்ள சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் கற்போர் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மையத்தை தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். கற்போர் மையத்தில் முதல்கட்டமாக தொழில் முனைவோருக்கான சான்றிதழ் படிப்பில் சேர்ந்த மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோருக்கு சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமையில் சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமா, ஜெயலட்சுமி, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.