Regional01

அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆய்வு

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இக்கல்லூரியை தஞ்சை மண்டல இணை இயக்குநர் உஷா தலைமையிலான பாரதிதா சன் பல்கலைக்கழக இணைவு குழுவில் உள்ள பேராசிரியர்கள் திருமுருகன், அஜ்மல்கான், சார்லஸ், சுவாமிநாதன், தாமஸ் பியூலா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, கல்லூரியின் கட்டமைப்பு, வகுப்பறைகள், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜ மூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT