Regional01

எஸ்டிபிஐ போராட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் வேளாண் சட்டங் களை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருநெல்வேலியில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.

மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்எஸ்எ. கனி, துணை தலைவர் சாகுல் ஹமீத், பாளையங்கோட்டை தொகுதி தலைவர் புஹாரி, செயலாளர் சலீம்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகே மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முஹம்மது, செயலாளர் அலாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT