Regional02

காஸ் விலை உயர்வு கண்டித்து போராட்டம்

செய்திப்பிரிவு

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிரான மூன்றுவேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்15வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தில் நேற்று போராட்டம் நடந்தது. சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் கிளை நிர்வாகி கெளசல்யா தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ச.நந்தகோபால், நவநீதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT