தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் வாவிபாளையத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். செயலாளர்ஜெயக்குமார் வரவேற்றார். புதியதலைவராக பரமசிவம், செயலாளராக ஜெயக்குமார், பொருளாளராக பாலசுப்பிரமணியம், துணை தலைவர்களாக சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, துணைசெயலாளர்களாக சுப்பிரமணியம், மூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நூல் விலை உயர்வுகுறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.