சேலம் திமுக எம்பி பார்த்திபனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் திமுக எம்பி பார்த்திபன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.