Regional01

ஆரணி அருகேதீ விபத்தில்சிறுமி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் வசித்தவர் செல்வராஜ் மகள் பரமேஸ்வரி(17). இவர், தனது வீட்டில் உள்ள அடுப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராமல் அவரது ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. இதில் தீயில் கருகி ஆபத்தான நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டு பரமேஸ்வரி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பல னின்றி நேற்று முன்தினம் உயிரி ழந்தார். இது குறித்து ஆரணி கிரா மிய காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT