பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டில் நேற்று ஏர்கலப்பை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் அண்ணா மலை தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி தலைவர் சுரேஷ் வரவேற்றார்.
ஏர்கலப்பை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதில், துணைத் தலைவர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ ராஜா பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.