Regional02

ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்க அனுமதி கோரி மனு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் முருகன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பாஜக நிர்வாகிகள் நேற்று ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பேரிகை, கிருஷ்ணகிரி பிரிவு சாலை அருகில் ரவுண்டானாவில் ஜல்லிக் கட்டு காளையை அடக்கும் வீரர் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT