வன்னியர்களுக்கு அரசு உயர் பதவிகள், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய மண்டலத்தில் நேற்று பாமகவினர் ஆர்ப்பாட்டம், மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் ஒற்றுமை திடலிலி ருந்து பாமக மாநில துணைத் தலைவர் சின்னதுரை தலைமையில் ஊர்வலமாக சென்ற பாமகவினர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். திருமானூரில் தொகுதி செயலாளர் தர்ம.பிரகாஷ் தலைமையில் பாமக மாவட்டத் தலைவர் ரவிசங்கர், தா.பழூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அசோகன் ஆகியோர் முன்னிலையில் பாமகவினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
செந்துறையில் மாநில செயற் குழு உறுப்பினர் சாமிதுரை தலைமையிலும், ஜெயங்கொண் டத்தில் மாநில செயற்குழு உறுப் பினர் ராஜேந்திரன் தலைமை யிலும், ஆண்டிமடத்தில் துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையிலும் சென்று பாமகவினர் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
வேப்பூர் ஒன்றிய அலுவலகத் தில் பாமக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மேலும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பாமக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டத்தில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில்...
திருவாரூர் மாவட்டத்தில்...