Regional02

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் கண்காணிக்க குழு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2021 முதல் 12.01.2021 வரைபொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும்ரொக்கத் தொகை ரு.2,500 வழங்கப்பட உள்ளது.

மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாயவிலைக் கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்புபெற்றுக்கொள்ளலாம். விடுபட்ட மின்னணு குடும்ப அட்டைகளுக்கு 13.01.2021 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

இப்பணி சீராக நடைபெறுவதை கண்காணித்திட, வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாகவும், நடமாடும் கண்காணிப்பு குழுக் களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. புகார்கள், குறைகள் ஏதுமிருப்பின் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 0461-2341471 மூலம் புகார் அளிக்கலாம் .

SCROLL FOR NEXT