Regional03

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை: ஆட்சியர்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி வெளிநாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடைவிதித்துள்ளன. ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் காற்று சுவாசமீன்களாகும். இந்த மீன்கள் தொடர்ந்துஇடைவிடாமல் பிற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. மேலும், 8 ஆண்டுகளுக்கு மேல்வாழக்கூடியது. இந்த மீன்கள் நீர் நிலைகளில் நுழைந்து விட்டால், அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

மேலும், இந்த மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவையாகும். நன்னீர் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலைஉருவாகும். எனவே, தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆணையை மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் வளர்ப்போர்கள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு செய்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT