Regional02

பல்லடம் இளைஞர் கொலை வழக்கில் உறவினர் உட்பட இரண்டு பேர் கைது

செய்திப்பிரிவு

இந்நிலையில், பல்லடம் - தாராபுரம் சாலையில் சக்திவேலை போலீஸார் நேற்று பிடித்து விசாரித்ததில், கடந்த 27-ம் தேதி இரவு மது அருந்தியபோது அவரவர் குடும்பத்தினரை தவறாக பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சக்திவேல், தமிழ்நாடு திரையரங்கு அருகே தங்கி மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த நண்பர் கிருஷ்ணகுமார் (36) என்பவரை அழைத்து, முருகனை கொலை செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரையும் போலீஸார் பிடித்தனர். முழு விசாரணைக்கு பிறகு, நேற்று இரவு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT