Regional02

ஆதிதிராவிடர் மேம்பாட்டு நூல்களுக்குஉதவித் தொகை

செய்திப்பிரிவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாடு அடையச் செய்யும்படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் படைப்பை நூலாக வெளியிடுவதற்கு நிதிஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான சிறந்த படைப்பாக ‘வானத்தை தேடும் மேகங்கள்’ - நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலை எழுதிய நூலாசிரியர் ஏ.வள்ளியப்பனுக்கு ரூ.20 ஆயிரத்துக்கான காசோலைவழங்கப்பட்டது. இந்த காசோலையை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வழங்க நூலாசிரியர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT