Regional01

ஓவிய கலைக்காட்சிக்கு படைப்புகள் வரவேற்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூர் மண்டலம் சார்பாக ஓவிய கலைக்காட்சி நடை பெறவுள்ளது. இக்கண்காட்சியில் மரபு வழி மற்றும் நவீன பாணி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங் மற்றும் வாட்டர் கலர் பெயிண்டிங் படைப்புகள் மற்றும் சிற்பங்களை தனிநபர் கண்காட்சியாக சந்தைப்படுத்திடலாம்.

இக்கண்காட்சியில் ஓவியக் கலைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,500 வீதம் 10 பேருக்கும், இரண்டாம் பரிசாக ரூ.2,500 வீதம் 10 பேருக்கும், மூன்றாம் பரிசாக ரூ. 1,500 வீதம் 10 பேருக்கும் வழங்கப்பட்டவுள்ளது.

எனவே விழுப்புரம் மாவட் டத்தில், ஆர்வமுள்ள ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது விவரக் குறிப்பு மற்றும் படைப்புகள் எண்ணிக்கை விவரங்களை வரும் 5-ம் தேதிக்குள் உதவி இயக்குநர்,மண்டலக் கலை பண்பாட்டு மையம்,பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம், நீதிமன்றச் சாலை.தஞ்சாவூர் - 613 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-232252, 9444949739, 9442507705 தொடர்பு கொள்ளவும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT