ஈரோடு மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களால், மின் கணக்கீடு செய்யப்படாத பகுதிகளில் கடந்த மாத கணக்கீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டம் கந்தசாமிபாளையம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட தாண்டாம்பாளையம், மோளபாளையம் மற்றும் விளாங்காட்டுவலசு மின் பகிர்மானங்களைச் சேர்ந்த மின்இணைப்புகளுக்கு, நிர்வாகக் காரணங்களால் டிசம்பர் மாதம் கணக்கீடு செய்யப்படவில்லை.
எனவே, சின்ன தாண்டாம்பாளையம், ஒத்தப்பனை, கலைஞர் நகர், உழைப்பாளி நகர், காந்தி நகர், ஊஞ்சக்காட்டு வலசு மற்றும் ராமமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் அக்டோபர் மாத மின் கணக்கீடு செய்த தொகையை செலுத்த வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.