Regional01

மேலப்பாளையத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி நிறுத்தம்

செய்திப்பிரிவு

மனிதநேய மக்கள் கட்சி மேலப் பாளையம் பகுதி தலைவர் ஏ.எம். மைதீன் பாதுஷா திருநெல்வேலி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: மேலப்பாளையம் செல்வகாதர் தெருவில் துணை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி கடந்த 10 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மேலப்பாளையத்தை சேர்ந்த மக்கள் ஆதார் புகைப்படம் எடுக்க பல்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆதார் அட்டை பெற முடியாத தால் பலரால் வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை. அரசின் சலுகைகளையும் பெற முடியவில்லை. மேலப்பாளையம் துணை அஞ்சலகத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT