தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் கிழிந்த, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடைபெற்றது.
பாரத ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடி பிரதான கிளையில் கிழிந்த மற்றும் அழுக்கான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வங்கி கிளை முதன்மைமேலாளர் ஆர்.மகேஷ் தலைமைவகித்தார். புதுக்கோட்டை கரன்சிசெஸ்ட் முதன்மை மேலாளர் ஆர்.சிதம்பரம் முன்னிலை வகித்தார். வங்கியின் துணை பொதுமேலாளர் பி.ஆர்.அசோக் குமார் முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கிழிந்த மற்றும் அழுக்கடைந்த பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய நாணயங்களை பெற்றுச் சென்றனர். முகாம் ஏற்பாடுகளை வங்கி உதவி மேலாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.