உக்கம் பெரும்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில்சனிப் பெயர்ச்சியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சனி பகவான். 
Regional01

நட்சத்திர விநாயகர் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் 27 நட்சத்திர அதிதேவதைகள் மற்றும் ராகு, கேது, சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு தனித் தனி சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் குரு, ராகு - கேது, சனி பெயர்ச்சி தினங்களில் சிறப்பு ஆராதனைகளும் காணும் பொங்கலன்று கோ பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார். இந்த சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமங்கள், கலச அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரானைகள் நடைபெற்றன. இந்த விழாவில் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT