கபடி போட்டியில் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. 
Regional02

செந்தமிழ் கல்லூரி கபடிப் போட்டியில் அமெரிக்கன் கல்லூரி முதலிடம்

செய்திப்பிரிவு

கல்லூரி முதல்வர் வேணுகா வரவேற்றார். சங்கச் செயலாளர் மாரியப்ப முரளி முன்னிலை வகித்தார். கல்லூரிக் குழு தலைவர் தசரத ராமன், ஆட்சிக்குழு உறுப்பினர் சத்திய நாராயணன் ஆகியோர் பேசினர். செந்தமிழ் இதழின் பதிப்பாசிரியர் சதாசிவம், மன்னர் சேதுபதி, வள்ளல் பொன்.பாண்டித் துரைத் தேவரின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினார்.

இதையொட்டி நடந்த சேதுபதி நினைவு கபடிப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற செந்தாமரைக் கல்லூரிக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT