Regional02

குண்டாறு அணையில் மூழ்கி விருதுநகர் இளைஞர் மரணம்

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், சுப்பையா புரத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரது மகன் முத்துக்குமார்(33). இவர், தனது நண்பர்கள் சிலருடன் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தார். விடுதியில் அறை எடுத்து தங்கி, பல்வேறு இடங்களுக்குச் சென்றனர். நேற்று முன்தினம் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைக்குச் சென்று குளித்தனர். அப்போது முத்துக் குமார் தண்ணீரில் மூழ்கினார். செங்கோட்டை தீயணைப்புப் படை வீரர்கள் குண்டாறு அணைப் பகுதியில் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், முத்துக்குமாரின் உடல் மீட்கப்பட்டது. செங்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT