இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சார்பில் தேசிய அளவிலான திறந்தநிலை வில்வித்தை போட்டி மேட்டூர் அடுத்த மூலக்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.
போட்டிக்கு, ஊரக விளையாட்டு வாரிய பொதுச் செயலாளர் சேகசவன் தலைமை வகித்தார்.
போட்டியில், தமிழகம், பிஹார், புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர்.
போட்டிகள் 10, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளாக நடந்தது. தமிழ்நாடு 7 ஸ்டார் ஆர்ச்சரி கிளப் முதலிடத்திலும், அமேசான் ஆர்ச்சரி கிளப் இரண்டாமிடத்திலும், போக்ஸ் சுர்ச்சரி கிளப் மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.இந்திய ஊரக விளையாட்டுத்துறை தலைவர் குமார், துணைத் தலைவர் சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.