Regional01

ஆட்சியர் அலுவலகம் முன் மறியல்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று சீர்மரபினர் பட்டியலில் உள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீர்மரபினர் பட்டியலில் உள்ள ஒட்டர், போயர் உள்ளிட்ட 68 ஜாதிகளை சேர்ந்தவர்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டும். சீர்மரபினர் பட்டிய லில் எவ்வளவு பேர் உள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி போராட்டம் நடைபெற்றது.

சீர்மரபினர் நலச் சங்க மாநிலச் செயலாளர் பி.அய்யாக் கண்ணு தலைமை வகித்தார். தமிழ்நாடு முத்தரையர் முன் னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆர்.வி.பரதன், ஆர்.வி.பாலமுருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலச் செயலாளர் காசிமாயத்தேவர், சீர்மரபினர் நலச் சங்க பிரச்சார குழுத் தலைவர் ஆர்.செல்லப் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT