Regional01

சமயபுரம் உண்டியலில் ரூ.1.19 கோடி காணிக்கை

செய்திப்பிரிவு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் 34 உண்டி யல்கள் நேற்று திறக்கப்பட்டன. இதில், ரூ.1,19,74,482 ரொக்கம், 1 கிலோ 866 கிராம் தங்கம், 5 கிலோ 222 கிராம் வெள்ளி மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 28 இருந்தன.

உண்டியல் திறப்பு நிகழ்ச்சி யில், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், உதவி ஆணையர்கள் க.ஞானசேகர் (வெக்காளியம்மன் கோயில்), செ.மாரி யப்பன் (திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்), கோயில் மேலாளர் ம.லட்சுமணன், அறநிலையத் துறை ஆய்வர் கு.தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT