Regional02

டன் கரும்புக்கு விலையாக ரூ.4,500 அறிவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் சின்னாறில் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மு.ஞானமூர்த்தி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 என விலை அறிவிக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.21.31 கோடியை பிப்ரவரி மாதத்தில் வழங்க வேண் டும். ஆலையில் உள்ள காலிப் பணியிடங்களை இடஒதுக்கீட்டு அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். இணை மின் திட்டத் துக்கு விவசாயிகளின் பங்குத் தொகையாக வழங்கிய ரூ.12 கோடிக்கான பங்குப்பத்திரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏ.கே.ராஜேந்திரன், சீனிவாசன், ஆ.பெருமாள், டி.எஸ்.சக்திவேல், வரதராஜன், தேவேந்திரன், பி.மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT