உயர் நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மாவட்ட ஆட்சியரின் காரில் இருந்து பம்பர் அகற்றப்பட் டது. மாவட்டம் முழுவதும் 35 வாக னங்களின் பம்பர் அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வாகனங்களின் முகப்பில் பொருத்தப்படும் பம்பர்களால் விபத்துகள் அதிகம் ஏற்படு வதுடன், விபத்து காலங்களில் உயிர் காக்கும் பலூன்கள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்தது. இதையடுத்து, விதி களை மீறி பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை பறிமுதல் செய்வது டன் அபராதம் விதிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத் தில் கடந்த இரண்டு வாரங்களாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதித்துள்ளனர்.
இதற்கிடையில், வேலூர் மாவட்ட ஆட்சியரின் காரில் இருந்த பம்பர் அகற்றப்பட்டது.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலனிடம் கேட்டதற்கு, ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஷோரூம் அதிகாரிகளிடம் கார் உள்ளிட்ட வாகனங்களில் பம்பர் பொருத் தக்கூடாது என விளக்கிக் கூறியுள்ளோம்.
வாகனங்களில் பம்பர் பொருத்துவதால் மிதிவண்டி, இரு சக்கர வாகனங்களில் செல் பவர்கள் மீது மோதும்போது அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, விற்பனையில் உள்ள கார்களின் இடது முன்பக்கத்தில் சென்சார் கருவிகள் பொருத்தியுள்ளனர். பம்பர் பொருத்துவதால் விபத்து நேரத்தில் சென்சார் வேலை செய்யாவிட்டால் உயிர் காக்கும் பலூன்கள் செயல்படாவிட்டால் எந்தப் பயனும் இல்லை. இதன்மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே, வாகனங்களில் பம்பர் பொருத்துவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.