இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95-வது அமைப்பு தினத்தையொட்டி பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஒன்றிய பகுதிகளில் 500 இடங்களில் கொடியேற்று விழா நடந்தது.
பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல். சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், துணை செயலாளர் ஜி.வெங்கடாசலம், பொருளாளர் பி.என்.ராஜேந்திரன், தொழிற்சங்க தலைவர் தா.சந்திரன், பழங்குடி மக்கள் சங்க சட்ட ஆலோசகர் ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்று கொடியேற்றி வைத்து பெயர் பலகையினை திறந்து வைத்தனர்.