Regional01

கடலூர் மாவட்டத்தில் 365 இடங்களில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கடலூர் கிழக்கு மாவட்ட திமுகசார்பில் 365 இடங்களில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடை பெறும் என்று மாவட்ட செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரி வித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று ( டிச.27) முதல் 10.1.2021 வரை ஊராட்சிகளிலும், நகரம், பேரூர் பகுதிகளில் வார்டுகளிலும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது.

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றிய பகுதிகளில் 230 ஊராட்சிகளிலும், நகர பகுதிகளில் 23 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 112 வார்டுகளிலும் ஆக மொத்தம் 365 இடங்களில் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இக்கூட்டங்களில் மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டுதிமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், திமுக சார்பு அணி களின் நிர்வாகிகள், திமுக மு ன்னோடிகள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள் ளார்.

SCROLL FOR NEXT