Regional02

தமிழக விவசாயிகளை திசை திருப்ப பொய் பிரச்சாரம் கடலூரில் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட அணிகள் நிர்வாகிகள் மாநாடு நேற்று கடலூரில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட பாஜகமூத்த தலைவர் ஹெச். ராஜா செய் தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும். இந்தச் சட்டத்தால் எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. தமிழக விவசாயிகளை திசை திருப்ப தீய சக்திகள் நடத்தும் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்.

அதிமுக மாநில கட்சி. யார் முதல்வர் என்பவதை முடிவு எடுக்கஅவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் பாஜக, அகில இந்திய கட்சி என்பதால் அதன் பாராளுமன்ற குழு தான் யார் முதல்வர் என்பதை முடிவு எடுக்க முடியும். இதனை நான் இப்ப சொல்லவே முடியாது.

2 ஜி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜனவரி 31-க்குள் தீர்ப்பு வரும். நீலகிரி, தூத்துக்குடி மக்களவைத் தொகு திகளுக்கு இடைத்தேர்தல் வரும். அதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை. திமுக ஊழலின் ஊற்றுக்கண் என்று கூறினார்.

SCROLL FOR NEXT