மதுரையைச் சுற்றியுள்ள அழகர்கோவில், ஒத்தக்கடை, தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி புராதன இடம் உள்ளிட்டவற்றை ஹெலிகாப்டரில் சுமார் 15 நிமிடங்கள் பயணம் செய்தவாறு பார்த்து மகிழலாம். இதற்காக நபருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தெற்குத் தெருவில் ஹெலிகாப்டரில் ஏறி, இறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சேவை டிச.24 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 6 பேர் பயணம் செய்யலாம். முதல் கட்டமாக டிச.29-ம் தேதி வரை மட்டுமே இச்சேவை நடைபெறும். இதற்குப் பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து ஹெலிகாப்டர் சேவை நீட்டிக்கப்படும். ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க முன்பதிவுக்கு 81110 61000 அல்லது 81110 31000 என்கிற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவையைச் சேர்ந்த தனியார் ஹெலிகாப்டர் நிறுவனமும், ஒரு பொறியியல் கல்லூரியும் இணைந்து செய்துள்ளன.