மதுரையில் வியாபாரி வீட்டில் 60 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீ ஸார் தேடி வருகின்றனர்.
மதுரை செல்லூர் அகிம்சா புரம் புதிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(40). இவர், மூன்றுமாவடி பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். இவரது மனைவி கார்த்திகா தல்லாகுளம் பகுதியிலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 26-ம் தேதி இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனர். இரவு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் முத்துக் குமார் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகைகளை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.