Regional02

திண்டுக்கல்லில் இலவச இதய பரிசோதனை முகாம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மதர்தெரசா லயன்ஸ் சங்கம், புனித வள னார் மருத்துவமனை சார்பில் பேகம்பூரில் ஐக்கிய நல மருத்துவமனை வளாகத்தில் இலவச இதயப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

லயன்ஸ் சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித் தார். லயன்ஸ் மாவட்டத் தலை வர் சாமி, லியோ, வில்லியம் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 114 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

முகாமில் இ.சி.ஜி., சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப் பட்டது. இலவச எக்கோ பரி சோதனையும் மேற்கொள்ளப் பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் காஜாமைதீன், அமானி அபூஅயூப்அன்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT