திருப்பரங்குன்றத்தில் நேற்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் ஜிஆர்.கார்த்தி தலைமையில் நடைபெற்றது.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜனவரியோடு ஜல்லிக்கட்டை முடிக்காமல், தொடர்ந்து ஆறுமாதம் நடத்த அனுமதிவழங்க வேண்டும். ஜனவரி 15-ல் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாயத்தினர் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுகட்டு விழா நடத்துவதற்குப் புதிதாக அனுமதி கேட்டால் அதிகாரிகள் கெடுபிடி காட்டாமல் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.