Regional01

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்

செய்திப்பிரிவு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இதில் முதல் போக பாசனத்துக்கு ஆகஸ்ட் மாதம் முதல், 120 நாட்கள் முறைவைத்து நீர் திறக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட காலம் முடிவடைந்த நிலையில், கூடுதலாக 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நீர் திறப்பு 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

நீர் இருப்பைப் பொறுத்து, கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 3500 ஏக்கர் நிலத்துக்கு அடுத்தபடியாக நீர் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், இது தொடர்பாக அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும், என்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.59 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 192 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT