Regional01

வெளிநாடு செல்வோர் இணைய வழி சேவையை பயன்படுத்த அறிவுரை

செய்திப்பிரிவு

வெளிநாடுகளுக்கு செல்வோர் இணைய வழிசேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வெளிநாடுகளில் வேலை, கல்வி மற்றும் சார்பு நுழை இசைவு (விசா) கோரும் இந்தியர்கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அரசுக்கு கல்வி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய அந்த சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் முத்திரையிட வேண்டும் என சில நாடுகள் கோருகின்றன.

இந்த ஆவணங்களை இணைய வழியில் சரிபார்த்து முத்திரையிட மத்திய அரசு, e-sanad என்ற இணைய வழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர், தொடர்புடைய தூதரகங்கள் முத்திரையிடப்பட்ட சான்றிதழ்கள் கோரும் பட்சத்தில் www.esanad.nic.in என்ற இணையத்தில் விவரங்களை பதிவு செய்து பிடிஎஃப் வடிவில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து, உரிய கட்டணம் செலுத்தினால், இணைய வழியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மத்திய வெளியுறவு அமைச்சகத்தால், அவரவர் வீடுகளுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். இச்சேவையை வெளிநாடு செல்வோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT