தூத்துக்குடி அருகே தாளமுத்துநகர் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional01

சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர் பகுதியில் உள்ள சிலுவைபட்டி முதல் முருகன் திரையரங்கம் வரையிலான நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை தமிழக முதல்வர் பழனிசாமி வருகையை முன்னிட்டு அண்மையில் சீரமைக்கப்பட்டது. ஆனால், சில இடங்களில் சாலை அமைக்காமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் விடுபட்ட இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாளமுத்து நகர் கிளை சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

சேதமடைந்த சாலைக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.சங்கரன், தாளமுத்துநகர் கிளை செயலாளர் எஸ்.ஐயப்பன், நிர்வாகிகள் ஜோதிபாசு, செல்வம், ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT