Regional01

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு இன்று தூத்துக்குடி வருகை

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதை யடுத்து திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவேண்டிய அறிவிப்புகள் தொடர்பாக திமுகவினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று தூத்துக்குடி வருகிறது. இக்குழுவினர் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைத்து கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக் கின்றனர். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், திட்டங்கள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி களையும் சேர்ந்த திமுக வினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கை களை தெரிவிக்கலாம் என மாவட்ட பொறுப்பாளர்கள் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT