தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும் 31.12.2020 வியாழன் இரவு மற்றும் 2021-ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான 01.01.2021 வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கடற்கரைகளில் கூட்டம் கூடுதல், தங்கும் விடுதி கள், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் புத் தாண்டு கொண்டாட்டங்கள் கொண்டாடு வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சத்தமிடுதல், பெண்களை கேலி செய்தல், திறந்த வெளியில் மது அருந்துதல், பைக் ரேஸ் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.