வந்தவாசியில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் வசிப்பவர் ரமேஷ். இவரது மகள் புவனேஸ்வரி(15). இவர், தனது தங்கை மதியுடன் வீட்டின் மாடியில் நேற்று முன்தினம் விளையாடி உள்ளார்.
அப்போது, எதிர்பாராமல் மாடியில் இருந்து புவனேஸ்வரி கீழே விழுந்துவிட்டதாக கூறப்படு கிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.