திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சமூக இடைவெளியை பின் பற்றாமல் நேற்று பக்தர்கள், அதிகளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கணிசமாக உள்ளது. வார விடுமுறை நாட்களில், அதன் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும். அதன்படி, ஞாயிற்றுகிழமையான நேற்று அதிகளவில் பக்தர்கள் திரண்டனர். அவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக் கப்பட்டது. மேலும், கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகள் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதேநேரத்தில், சமூக இடைவெளியை கடைபிடிக்க பக்தர்கள் முன் வரவில்லை. அவர்களை வழி நடத்தவும் கோயில் நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. இதனால், சமூக இடைவெளியின்றி, வரிசையில் சென்று, சிறிது நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள், உண்ணாமுலை அம்மன் உட்பட கோயிலில் உள்ள பல்வேறு சன்னதி களில் வழிபாடு செய்தனர்.