Regional02

எருது விடும் திருவிழா நடத்த 14 கிராம மக்கள் கோரிக்கை மனு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாவை நடத்த அனுமதிக் கேட்டு 14 கிராமங்களைச் சேர்ந்தவிழாக் குழுவினர் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீரத்தை எடுத்துரைக்கும் ‘ஜல்லிக்கட்டு’ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு திருவிழாவை முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அரசு அனுமதி யளித்தது. இதனால், ஜல்லிக்கட்டு ரசிகர்கள் மற்றும் விழாக்குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலை யில், வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதிக் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பனமடங்கி, கீழ்முட்டுக்கூர், கோவிந்தரெட்டிபாளையம், சோழவரம், அணைக்கட்டு, புலிமேடு, ஊசூர், பாக்கம் பாளையம் உள்ளிட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த விழாக் குழுவினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களது கிராமத்தில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதிக் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்த மனு மீதான ஆலோ சனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் ஓரிரு நாளில் நடைபெறும் என்றும், அதில் போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள், மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவப் பரிசோதனைகள் குறித்து ஆலோ சனை நடத்தி, அதன் பிறகு முறையான அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT