Regional02

அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் முடித் திருத்தகம், அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் நடத்துவோர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து உரிய விண்ணப்பம் பெற்று, அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், உரிமம் பெறாமல் செயல்படும் நிலையங்களுக்கு சீல்வைக்கப்படும்.

மேலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் சந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

SCROLL FOR NEXT