விழுப்புரம் மாவட்டம் கீழ் பாதியை அடுத்த சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர் தென்னக ரயில்வே யில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.
நேற்று வழக்கம் போல் பணிக் குச் சென்றவர் சென்னை-திருச்சி ரயில் மார்க்கத்தில் இருப்புப் பாதை மீது நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது செங்கோட்டையி லிருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை அதிவிரைவு ரயில், இருப்புப் பாதையில் நடந்து சென்ற ஜெயபால் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து ள்ளார்.
தகவல் அறிந்த விருத் தாசலம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று,ஜெயபாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.