திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.குன்னத்தூர் கிராமத்தில் தீயில் கருகிய வீடுகள். 
Regional02

தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து சேதம்

செய்திப்பிரிவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே தி.குன்னத்தூர் கிராமத்தில் நேற்றுபிற்பகல் முனியன் மகன் காளி என்பவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவிஅருகில் இருந்த ராஜா, அர்ஜுனன்,பெருமாள், ஏழுமலை, மணிகண் டன், எட்டியான், செல்வம், கேசவன்,பாஸ்கர் ஆகிய 10 பேரின் வீடுகளில் தீ பற்றியது. இதையறிந்த அக்கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ வேகமாக பரவியதால் மக்கள் நெருங்க முடிய வில்லை. இதற்கிடையில் தகவலறிந்து அங்கு வந்த திருவெண் ணெய்நல்லூர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத் தனர்.

இந்த தீ விபத்தில் அர்ஜுனன் மகள் நிர்மலா தேவி நர்சிங் படிப்பிற்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம், 6 பவுன் நகைகள், ஏழுமலை மகள் மாலாவின் திருமணம் ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம், 3 பவுன் நகைகள் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.15 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவெண்ணெய் நல்லூர் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT