Regional01

அனைத்து மறவர்களுக்கும் டிஎன்டி சான்றிதழ் மறவர் நலக் கூட்டமைப்பு தீர்மானம்

செய்திப்பிரிவு

மறவர் நலக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மதுரை யில் நேற்று நடந்தது. தலைவர் கே.சண்முகசாமி, பொதுச் செயலாளர் எஸ்.சுப்பையா, ஆலோசகர்கள் சி.விஜயகுமார், சக்திவேல், மாநில ஒருங்கிணைப் பாளர் எஸ்.முத்துராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மத்திய அரசு அறிவுறுத்தி யவாறு தமிழகத்தில் சீர்மரபினர், நாடோடிகள், அரை நாடோடி வகுப்பினர் மக்கள் தொகை, குடும்பச் சூழல் குறித்த விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறவர்களை சீர்மரபு பழங் குடியினர் (டிஎன்டி) என மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT