ஏரல் அருகேயுள்ள வரதராஜபுரத்தில் சீனிவாசன் சேவை அறக்கட்ட ளையால் பரிந்துரை செய்யப்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 55 மகளிருக்கு ஆறுமுகனேரி வாரச்சந்தையில் விலை யில்லா ஆடுகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. கால்நடை உதவி இயக்குநர் சுரேஷ் மற்றும் அறக்கட்டளை கள இயக்குநர் விஜயகுமார் ஆகியோர் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினர். வரதராஜபுரம் ஊராட்சி தலைவர் ராஜ், பண்டாரவிளை கால்நடை மருத்துவமனை மருத்துவர் தெய்வானை கலந்து கொண்டனர்.