Regional01

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் பெண் களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘உலக மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த ஒரு வருக்கு அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக, வேலூர் மாவட்டத்தில் தகுதி யானவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது பெற இருப்பவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட வராகவும், 18 வயதுக்கு மேற்பட்ட வராகவும் இருக்க வேண்டும்.

சமூக நலன் சார்ந்த நடவடிக் கைகளில் பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் நிர்வாகம் போன்ற துறைகளில் நேர்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவோராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத் துக்காக சிறப்பாக சேவை செய்த விவரம் ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் ஒரு இணைப்பு படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலர், பி-பிளாக், 4-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலம், சத்துவாச்சாரி, வேலூர் என்ற முகவரிக்கு வருகிற 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT