அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனையாளர்களாக உள்ளனர் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
‘நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தி.மலை மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. பள்ளி கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, “முதல்வர் பழனிசாமி அறிவித்த 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக, இந்தாண்டு 399 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள்தான், சாதனை யாளர்களாக உள்ளனர்.
சாதிக்க முடியும் என்ற எண்ணம், அரசுப் பள்ளி மாணவர்களின் உள்ளத்தில் உள்ளது. சாதிப்பது எப்படி என ஆசிரியர்கள் வழிகாட்டி னால், அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் சாதனை யாளர்களாக உருவெடுப் பார்கள். மாணவர்களிடத்தில் ஆர்வம் இருக்க வேண்டும், ஆசிரியர்களிடத்தில் மாண வர்களை ஊக்கப்படுத்தும் எண்ணம் இருக்க வேண்டும். நம்மை நம்பி வரும் மாண வர்களுக்கு ஞானம் தரும் கல்வியை போதிப்பதுதான், சிறந்த ஆசிரியரின் கடமையாக இருக்க முடியும்.
கல்வியால் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண் டும். பொருளாதார மாற்றம் மற்றும் தலைமுறை மாற்றத்தை கல்விதான் ஏற்படுத்தும். நமது கனவு மற்றும் பெற்றோரின் கனவு மெய்பட, மனதில் உறுதியும், விடா முயற்சியும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் குறிக்கோளுடன் பயின்று லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள்” என்றார். முன்ன தாக அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கவுரப்படுத்தி நினைவுப் பரிசு வழங்கினார்.